ஹர்ஷத சில்வாவுக்கு , கொழும்பு SJB தலைமைப் பதவியை வழங்க முடியாது – ஜனாதிபதி

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத் தலைமையை வழங்க முடியாது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறினார்.
ஜனாதிபதி பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துக் கொண்டிருந்தபோது, ஹர்ஷ டி சில்வா எம்.பி. குறுக்கிட்டதற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
கொழும்பு மாவட்டத் தலைமையை எதிர்க்கட்சித் தலைவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி கூறினார்.