யாராவது லஞ்சம் வாங்கினால் எந்த மன்னிப்பும் கிடையாது – அச்சுறுத்திய ஜனாதிபதி

வரி செலுத்துபவர்களின் ஒவ்வொரு ரூபாய்க்கும் நீதி கிடைக்கும் என்று கூறிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தனது வரவு செலவுத் திட்ட உரையை முடிக்கும் போது, தனது அரசாங்கத்தின் கீழ் லஞ்சம் வாங்க பயப்படும் சமூகத்தை உருவாக்குவதாகக் கூறினார்.
தற்போதைய அரசாங்கத்தின் அதிகாரிகளிடையே நடைபெறும் ஊழலை சகித்துக் கொள்ள முடியாது என்றும், லஞ்சம் வாங்க முயற்சிப்பவர்கள் பயப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும், தனது அரசாங்கத்தின் எந்த உறுப்பினராவது லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டால், அவர்கள் சார்பாக எந்த வகையிலும் காப்பாற்ற வர மாட்டேன் என ஜனாதிபதி கூறினார்.