சுகமான பேருந்து சேவையை தொடங்க வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிவு.

பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்குவதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வசதியான பேருந்துகளை முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்த இந்த முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு நகர்ப்பகுதியில் மூன்று முக்கிய வழித்தடங்களில் தாழ்வான தளம் கொண்ட நூறு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 3,000 மில்லியன் ரூபாயை ஒதுக்க முன்மொழிவதாக ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்துகையில் தெரிவித்தார்.
கூடுதலாக, இலங்கை போக்குவரத்து சபை பயணிகளுக்கு வசதியான தாழ்வான தளம் கொண்ட 200 பேருந்துகளை அதன் சொந்த நிதியைப் பயன்படுத்தி இந்த பேருந்து சேவைக்காக இயக்கவுள்ளது.
“மெட்ரோ பஸ் நிறுவனம்” என புதிதாக நிறுவப்படவுள்ள பேருந்து நிறுவனத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என ஜனாதிபதி தனது வரவு செலவுத் திட்ட உரையில் மேலும் குறிப்பிட்டார்.