பதில் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி லஃபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிப்பு.

நீதிபதி மொஹமட் லஃபார் தாஹிரின் பதவிக்காலம் பதில் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பதவிப் பிரமாணம் இன்று (17) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாரநாயக்கவும் கலந்து கொண்டார்.