தலைகீழாக கவிழ்ந்த பயணிகள் விமானம்!

கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கியவுடன் தலைகீழாக கவிழ்ந்தது. நாட்டில் நிலவியுள்ள புதிய டேப் மண்டல ஜெட் பனிப்புயலைத் தொடர்ந்து காற்றுடன் கூடிய வானிலைக்கு மத்தியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்த 76 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் உட்பட 80 பேரில் 18 பேர் வரையில் பலத்த காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். குழந்தைகள் உட்பட காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
90 பேர் வரையில் அமர்ந்து பயணிக்க கூடிய விமானம் இதுவாகும். குளிர்ந்த காலநிலை காரணமாக விமானம் கவிழ்ந்து நீண்ட தூரம் இழுத்து சென்ற நேரத்தில் ஏற்பட்ட பயங்கரமான உராவுகளின் போதும் வெடித்து சிதறாமல் இருக்க முக்கிய காரணமாக அமைந்ததாக தெரிகிறது.