மன்னார் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் மாயம்… குழந்தைகள் விடுதி மூடப்பட்டது.

 

மன்னார் வைத்திய சாலையில்  குழந்தை நல மருத்துவர் அறிவித்தலின்றி விலகியதால் மருத்துவமனை நிர்வாகம் பரிதாபகரமாக நிலையில் உள்ளது… அனைத்து குழந்தைகளும் கர்ப்பிணித் தாய்மார்களும் வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்கள்…தொலைபேசியும் துண்டிக்கப்பட்டுள்ளது… பல நாட்களாக பணிக்கு வரவில்லை… நிர்வாகத்திடம் தெரிவிக்காமல் வேலையிலிருந்து விலகியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன…

மன்னார் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் சில நாட்களாக மாயமாகிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் சில நாட்களாக பணிக்கு வரவில்லை என்றும் அவரது தொலைபேசியும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மன்னார் மருத்துவமனையின் ஏனைய மருத்துவர்கள், அவர் நிர்வாகத்திடம் தெரிவிக்காமல் வேலையிலிருந்து விலகியதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாகவும், ஆனால் அவர் அதை நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

இது உறுதி செய்யும் தொலைபேசி குறுஞ்செய்தி ஒன்றை அந்த சிறப்பு மருத்துவர் தனது நண்பருக்கு அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எப்படியிருந்தாலும், மன்னார் மருத்துவமனையில் குழந்தை நல மருத்துவர் இல்லாததாலும், அவருக்கு பதிலாக உடனடியாக ஒருவரை நியமிக்க முடியாததாலும், குழந்தைகள் விடுதியின் அனைத்து நடவடிக்கைகளும் முற்றிலுமாக முடங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வாக, கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் உட்பட அனைவரையும் , வவுனியா பொது மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை நடைமுறையில் மிகவும் கடினமான விடயமாக இருப்பதால், புதிய மருத்துவர் நியமிக்கப்படும் வரை அல்லது வவுனியா பொது மருத்துவமனையிலிருந்து ஒரு குழந்தை நல மருத்துவரை மன்னார் மருத்துவமனைக்கு வழங்குமாறு மன்னார் மருத்துவமனையின் மாவட்ட மருத்துவ அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.