தெற்கில் மீண்டும் துப்பாக்கிச் சூடு. ஒருவர் பலி!

மித்தேனியா பகுதியில் நேற்று (பெப்ரவரி 18) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு T56 துப்பாக்கியால் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.