நிலந்தி கொட்டஹச்சி NPP கட்சி போட்ட வாய் பூட்டு……. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க அனுமதி கிடையாது.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
கெசல்வத்தல கிம்பத பகுதியில் நடந்த கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் போது செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டபோது அவர் கூறியதாவது:
“மன்னிக்கவும்.. ஊடகங்களுடன் பேச வேண்டாம் என்று கட்சி எனக்கு அறிவுறுத்தியுள்ளதால், என்னால் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது.”
அண்மையில் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்குப் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.