போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் ….

போப் பிரான்சிஸ் தொடர்ந்து நான்காவது நாளாக மருத்துவமனையில் இருக்கிறார்.
சுவாசக் குழாயில் ஏற்பட்ட பிரச்சினைக்காக அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.
அவரின் காய்ச்சல் தணிந்திருப்பதாய் வத்திகன் தெரிவித்தது.
88 வயது போப் பிரான்சிஸ் கடந்த வெள்ளிக்கிழமையன்று (14 பிப்ரவரி) ரோமின் Gemelli மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிறுவயதில் அவரது நுரையீரலின் ஒரு பகுதி நீக்கப்பட்டது.
அண்மைக் காலமாக அவர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாய்க் கூறப்பட்டது.