மித்தெனிய துப்பாக்கிச் சூட்டில் தந்தையும், மகளும் பலி!

நேற்றிரவு மித்தெனிய பொலிஸ் பிரிவில், கடவத்த சந்தியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 39 வயது தந்தையும், 06 வயது மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கல்பொத்த பகுதியை சேர்ந்த அருணா விதானகம என்கிற கஜ்ஜா என்பவரே சம்பவம் நடந்த நிகழ்ந்த இடத்தில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற இவரும், இவரது மகனும் மகளும் காயமடைந்துள்ள நிலையில் மகள் தங்காலே வைத்தியசாலையிலும் மகன் அம்பிலிபிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி 6 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த துப்பாக்கி சூடுக்காக T-56 வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக போலீஸ் சந்தேகிக்கின்றனர். சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். துப்பாக்கி சூட்டிற்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.