நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை!

இன்று கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டைக் கருத்தில் கொண்டு, யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு இன்று (19) சபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இரண்டு நபர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளேன். பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கு செல்ல நான் திட்டமிட்டுள்ளேன்.

அதனால் பொது அமர்வு காலத்திலாவது எனக்கு குறைந்தபட்சம் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சரிடம் நான் இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இது முக்கியமான விடயம் என்பதால் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இதன்போது சபைக்கு தலைமைதாங்கிய பிரதி சாபாநாயகர், அந்த வேண்டுகோளை சபாநாயகருக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.