நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச் சூடு – கொலைசெய்து விட்டு தப்பிய கமாண்டோ பாலாவியில் கைது! உதவிய பெண் தேடப்படுகிறார்

கொழும்பு அளுத்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்ற வளாகத்தில் நடந்த அதிர்ச்சிகரமான துப்பாக்கிச் சூடுக்கு முக்கிய பாத்திரமாக இருந்த முன்னாள் ராணுவ கமாண்டோ முகமது அஸ்மான் ஷெரிப்தீன் (வயது 34) கைது செய்யப்பட்டுள்ளார்.
சஞ்சீவின் மீது நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்திய இவர், நீதிமன்றத்துக்குள் “நீதிமன்றத்துக்குள் சுடுறாங்க!” என அலறிக்கொண்டே தப்பி ஓடினார். அதன் பின்னர் இந்தியா மூலம் துபாய்க்கு செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், புத்தளத்தின் பாலாவியில் வைத்து பிடிபட்டார். துப்பாக்கிச் சூடு எப்படி நடந்தது?
இந்த தாக்குதல் திட்டமிட்டு முன்னேற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருவரும் வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்திற்குள் நுழைந்தனர்.
முகமது அஸ்மான் துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம் , இசாரா செவ்வந்தி என்ற பெண்,3.2 ரிவோல்வரை சட்ட புத்தகத்துக்குள் மறைத்து கொண்டு வந்து, அவர் கைக்கு அளித்தார்.
பாதுகாப்பு முறைமையை சூழ்ச்சி செய்து, வழக்கறிஞராக நடித்து, இந்த கொலை செயல்திட்டம் வெற்றிகண்டது.
கைது, விசாரணைகள், மற்றும் புதிய தகவல்கள்
சம்பவத்திற்கு பிறகு, அஸ்மான் ஷெரிப்தீன் பல்வேறு பெயர்களில்
உண்மையை மறைத்து வந்திருக்கிறார்.
மொஹமட் அஸாம் ஷெரீப்தீன் , சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி , கொடிகாரகே கசுன் பிரபாத் நிஷங்க என பல பெயர்களில் இருந்து பல கொலைகளை ஏற்கனவே செய்துள்ளார்.
தற்போது, கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் அவரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவருடன் செயல்பட்ட இசாரா செவ்வந்தி உள்ளிட்ட உதவியவர்களை பிடிக்க போலீசார் வலைவீசியுள்ளனர்.
பாதாள உலகத் தொடர்பு
இந்த கொலைக்குப் பின்னணியில் துபாயில் இருக்கும் கமாண்டோ சலிந்த எனப்படும் பாதாள உலகத் தலைவர் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. துபாயில் இருந்து வாட்ஸ்அப் அழைப்பில் அவர் தன் தொடர்பை உறுதி செய்துள்ளார்.
பொது மக்களின் உதவியோடு, தப்பி மறைந்துள்ள இசாரா செவ்வந்தியை பிடிக்க காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் உதவியையும் காவல்துறை நாடியுள்ளது.