மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் கைது.

மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இன்று (20.02) வியாழன் அதிகாலை 4 இந்திய மீனவர்களை ஒரு மீன்பிடி படகுடன் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாடு ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர் .
வட மத்திய மாகாண கடற்படையினரின் கூட்டு நடவடிக்கையின் போதே, தலைமன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களை இன்று (20) கடற்றொழில் மீன்பிடி, நீரியல் வளத் திணைக்களத்தினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.