“இந்த முறையை உடனடியாக மாற்றுவோம்” பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு.

நேற்று (19) காலை அளுத்கடே நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5வது மாஜிஸ்திரேட் நீதிமன்ற அறையில் கணேமுல்ல சஞ்சீவ் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தற்போதைய பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்குள் சோதனையிடப்படாததால், யார் வேண்டுமானாலும் வழக்கறிஞர் போல் நீதிமன்றத்திற்குள் நுழைய முடியும் என்பது தெளிவாக உள்ளது என்றார்.
அதன்படி, எதிர்காலத்தில் அனைத்து வழக்கறிஞர்களையும் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக ஒத்துழைப்பு வழங்குமாறு வழக்கறிஞர் சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
மேலும், ஆயுதம் ஏந்திய பொலிஸ் மற்றும் STF அதிகாரிகள் நீதிமன்ற அறைகளுக்குள் நிறுத்தப்படுவார்கள் என்றும், அதன்படி தேவையான நிறுவனங்களிடமிருந்து விரைவாக ஒப்புதல்களைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரியந்த விஜேசூரிய மேலும் தெரிவித்தார்.