மித்தேனியா துப்பாக்கிச் சூடு- காயமடைந்த சிறுவனும் பலி.

மித்தேனியா பகுதியில் நேற்று முன் தினம் (18) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனும் உயிரிழந்தான்.
காலி தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த 09 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
(18) இரவு மித்தேனியா, கதேவத்த சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அந்த சிறுவனும் சுடப்பட்டான்.
துப்பாக்கிச் சூட்டில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவரது மகன் மற்றும் மகள் காயமடைந்தனர்.
பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக தங்கல்ல மற்றும் அம்பிலாபிட்டிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், அங்கு மகளும் உயிரிழந்தார்.