சிலிண்டர் ஒன்று விலக ரணில் மீண்டும் பாராளுமன்றத்திற்கு..

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என சில உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, தற்போது பாராளுமன்றத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக இருக்கும் ஒருவர் ராஜினாமா செய்த பின்னர் உருவாகும் வெற்றிடத்திற்கு ரணில் நியமிக்கப்படுவார்.
ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வந்த பிறகு, எதிர்க்கட்சியில் உள்ள பல உறுப்பினர்கள் அவருடன் இணைய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளனர்.