இந்தியாவில் 10 பில்லியன் டொலர்ஸ் முதலீடு செய்ய கத்தார் திட்டம்.

2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில், கத்தார் அரசு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியின் சமீபத்திய இந்தியா விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் விவாதித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், நிதி, விளையாட்டு, இளைஞர் மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள், கலாச்சாரம், நட்பு மற்றும் விளையாட்டு கொண்டாட்டங்கள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.