மற்றொரு துப்பாக்கிச் சூடு-ஒருவர் பலி.

ஜா-எல உஸ்வெட்டகெயியாவ கடற்கரையில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது, மேலும் சடலத்தில் பல துப்பாக்கிச் சூட்டு காயங்கள் இருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
கிடைக்கும் தகவலின்படி, அயன் சாந்த போபே ஆராய்ச்சி என்ற இந்த நபர் துபாயில் இருந்து, இலங்கைக்கு வந்து இரண்டு மாதங்களே ஆகியுள்ளன.
கடவத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயது நபரே இந்த கொலையை செய்துள்ளார் என பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.