தேவையேற்படின் தனிமைப்படுத்தும் ஊரடங்குச் சட்டம் விதிக்கவும் பின்நிற்கமாட்டோம்.
ஒருபோதும் பின் நிற்கமாட்டோம் – இராணுவத் தளபதி விசேட அறிவிப்பு
ஸ்ரீலங்காவில் உள்ள ஏனைய பிரதேசங்களுக்கும் தேவைப்பட்டால் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்படும் என்று இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் விசேட அறிவிப்பொன்றை வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,
கொழும்பு – பேலியகொடை மீன் சந்தைக் கட்டிடத் தொகுதியில் 40இற்கும் மேற்பட்டவர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அதேபோல களுத்துறை அகலவத்த பிரதேசத்தில் 05 பகுதிகளில் தனிமைப்படுத்தும் பயணத்தடைகள் விதிக்கப்பட்டன.
இதேபோல ஏனைய பிரதேசங்களிலும் தேவையேற்படின் தனிமைப்படுத்தும் ஊரடங்குச் சட்டம் விதிக்கவும் தீர்மானம் எடுக்க பின்நிற்கமாட்டோம்.
நாடு முழுவதிலும் முடக்கம் செய்யப்படலாம் என்று பலரும் கூறிவருகின்றனர். எனினும் கடந்தமுறை தொற்று பரவியபோது அவ்வாறு நடவடிக்கை எடுத்தோம்.
ஆனால் இம்முறை கடந்த காலத்தில் ஏற்பட்ட அனுபவத்திற்கு அமைய, குறிப்பிட்ட சில இடங்களில் மாத்திரமே ஊரடங்குச் சட்டங்களை விதித்து வருகின்றோம்.
186 பேருக்கு குறுகிய நாட்களில் சிகிச்சை முடிந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.
இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் தேவையேற்படுகிற எந்த பிரதேசத்திலும் தனிமைப்படுத்தும் ஊரடங்குச் சட்டத்தை விதிக்க நாங்கள் பின்நிற்கமாட்டோம் என்றார்