எல்.ரீ.ரீ உட்பட 15 அமைப்புகளின் தடையை மேலும் நீட்டித்து வர்த்தமானி அறிவிப்பு.

தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ) உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்த இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அமைப்புகள் அவ்வப்போது பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் நிதி உதவி செய்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, 222 நபர்களின் பெயர்ப் பட்டியலும் இந்த அதிவிசேட வர்த்தமானி பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலகத் தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் நிவாரண நிதி, தலைமையகக் குழு, தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தே மிலாத்தே இப்ராஹிம், விலாயத் அஸ் செயிலானி, கனேடிய தமிழ் தேசிய சபை, திராவிட இளைஞர் அமைப்பு, தாருல் அதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம், சேவ் தி பேர்ல்ஸ் ஆகிய அமைப்புகளின் நிதிச் சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்கள் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன.