புதுக்கடை சஞ்சீவ கொலை குறித்து உளவுத்துறைக்கு முன்னரே தகவல் கொடுத்தும் அதை கவனிக்கவில்லை : SJB பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார குற்றச்சாட்டு!

மெதிவலவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அதிகாரப்பூர்வ குடியிருப்பு வளாகத்தைச் சுற்றி பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற வளாகத்திலும் பொலிஸ் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொது வீதியில் கொல்லப்பட்டால், தற்போதைய அரசாங்கம் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து நாட்டின் புலனாய்வுத் துறை சில வாரங்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டதாகவும், ஈஸ்டர் தாக்குதலின் போது செய்தது போல், அந்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காததால் தாக்குதல் நடக்க வாய்ப்பு ஏற்பட்டதாகவும் உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

தாக்குதலை திட்டமிட்ட சிங்ஹபுர தேவகே இஷாரா செவ்வந்தி உட்பட அனைத்து தகவல்களையும் புலனாய்வுத் துறை அறிக்கை வெளியிட்டதாகவும், இது இரண்டாவது ஈஸ்டர் தாக்குதல் என்றும் ரோஹன பண்டார மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

நீதிமன்றத்திற்கு வந்து தாக்குதல் நடத்திய பெண் வெளியேறிவிட்டார் என்றும், பாதுகாப்பு வீரர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள் அவரது முடியைக்கூட பிடிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கொலையை செய்த துப்பாக்கிதாரி தப்பிச் சென்ற வாகனத்தின் எண் மற்றும் விபரங்கள் , துபாயில் இருந்து கிடைத்த தகவலின் மூலம் கைது செய்ய முடிந்ததாகவும், இன்று வரை இந்த கொலையை திட்டமிட்ட பெண்ணை கைது செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

(செவ்வந்தி தற்போது கைதாகியுள்ளார்)
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தொடர்புடைய செவ்வந்தி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தொடர்புடைய செவ்வந்தி கைது

Leave A Reply

Your email address will not be published.