முதலைக் கண்ணீர் வடிக்கும் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக இருந்த “கஜ்ஜாவின்” செயல்பாடுகள் இதோ.!

மித்தேனிய அருண விதான கமகே அல்லது “கஜ்ஜா” கடந்த காலத்தில் தங்கல்ல, மித்தேனிய, கரந்தெனிய, மீகாம்ஆர, மெதமுலன ஆகிய பகுதிகளில் பல குற்றங்களில் ஈடுபட்டவர் என பொலிஸார் கூறுகின்றனர்.
சால்வை அரசியல் பலத்தை கையில் எடுத்து “மித்தேனிய கஜ்ஜா” என்ற புனைப்பெயரில் தெற்கில் பிரபலமான இவர் மூன்று குழந்தைகளின் தந்தை ஆவார்.
பாதாள உலகத்தினரின் இலக்கான மித்தேனிய கஜ்ஜா தனது கடைசி மூச்சை விட்ட இடத்தில் இரண்டு கைவிலங்கு ஜோடிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர், மேலும் அவர் இதற்கு முன்பும் கைவிலங்குகளுடன் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட மித்தேனிய கஜ்ஜா செய்த சில குற்றங்கள் பின்வருமாறு..
*கடந்த 2022 ஆம் ஆண்டு அரகலய காலத்தில் ஒரு அரசியல்வாதியின் வீட்டை எரிக்க வந்த போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி மூன்று பேரை கொன்றது.
*கடந்த 2021 ஆம் ஆண்டு பேருந்தில் பணம் கொள்ளையடித்தது, கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
*கடந்த 2019 ஆம் ஆண்டு அம்பிலிட்டியில் ஒரு நபரை கொலை மிரட்டல் செய்து கப்பம் வாங்கியது.
*கடந்த 2019 ஆம் ஆண்டு T-56 துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டது.
*கடந்த 2019 ஆம் ஆண்டு ஜீப் வண்டியை கொள்ளையடித்தது.
*கடந்த 2019 ஆம் ஆண்டு முச்சக்கர வண்டியை கடத்தியது.
*கடந்த 2014 ஆம் ஆண்டு மித்தேனிய பகுதியில் ஒரு வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்தது.
துப்பாக்கிச் சூட்டில் இறந்த இரண்டு குழந்தைகள் குறித்து நாடு முழுவதும் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், மித்தேனிய கஜ்ஜாவை கொன்றது யார்.? இந்த கொலையில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளார்களா.? என்ற கேள்வி எழுந்தாலும், அவருடன் பல குற்றங்களின் வேர்களும் மறைந்துவிட்டன.
கஜ்ஜா மெத முலன, தங்கல்ல, மித்தேனிய, கரந்தெனிய, மீகாம்ஆர ஆகிய பகுதிகளில் பாதாள உலக நடவடிக்கைகளை செய்து கொண்டிருந்தபோது, தெற்கில் உள்ள அரசியல்வாதிகள் அமைதியாக இருந்தனர், இப்போது பாராளுமன்றத்தில் முதலைக் கண்ணீர் வடிக்கும் சில அரசியல்வாதிகள் பாதாள உலகம் தலைதூக்கிவிட்டதாக தற்போதைய ஆட்சி மீது விரல் நீட்டுகின்றனர்.
நாட்டில் பாதாள உலகம் தலைதூக்கி இருப்பதை விட, இந்த கொலைகள் , முக்கிய கொலைகளின் முக்கிய சாட்சிகளாக இருக்கும் நிலையில், அந்த சாட்சிகளை அழிக்க அவர்கள் இவ்வாறு கொலை செய்கிறார்களோ என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.