சஞ்சீவின் இறுதிச் சடங்கு பொரளையில் – தாய், மனைவி, மகள் வரவில்லை!

கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் இறுதிச் சடங்கு நேற்று (21) மாலை பொரளை மாயானத்தில் நடைபெற்றது. உடல் ஜெயரத்ன மலர் மண்டபத்தில் வைக்கப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி மாலை அடக்கம் செய்யப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் கணேமுல்ல சஞ்சீவவின் மூத்த சகோதரி மற்றும் நண்பர்கள் என்று கூறப்படும் சிலர் கலந்து கொண்டனர், ஆனால் அவரது உடலை அடையாளம் காண நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை அறைக்கு வந்த வயதான தாய், சஞ்சீவின் மனைவி அல்லது மகள் எவரையும் காண முடியவில்லை.