வவுனியா மாவட்ட சாரணர் சங்கத்தினரால் புகையிரத நிலையங்களை அழகுபடுத்தல் செயற்பாடு.

சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் ரோபர்ட் பேடன் பவல் பிரபுவின் 168வது பிறந்தநாளை முன்னிட்டு இலங்கை சாரண சங்கத்தின் வவுனியா மாவட்ட கிளையின் சாரணர்கள் வவுனியா புகையிரத நிலையங்களை அழகுபடுத்தும் செயற்பாடு மாவட்ட ஆணையாளர் யோ.கஜேந்திரன் அவர்களின் தலைமையில் இன்று ஆரம்பம்.
இத்திட்டம் தேசிய சாரணர் தலைமையகத்தின் கருத்தாக்கம் மற்றும் “Clean SriLanka” உடன் இணைந்து செயற்படும் தேசிய வேலைத்திட்டமாகும்.
திரு.சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன்,
தலைவர்,
இலங்கை சாரணர் சங்கம் ,
வவுனியா மாவட்ட கிளை.