14 ஆக உயர்ந்தது கொரோனா சாவு!

14 ஆக உயர்ந்தது கொரோனா சாவு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.
குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான பெண்ணொருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த பெண் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் உயிரிழந்துள்ளார்.
இவருடன் சேர்த்து இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.