சஞ்சீவ கொலைக்கு சற்று முன்பு துப்பாக்கி ஏந்தியவருக்கும் கமாண்டோ சலிந்தவிற்கும் இடையிலான வாட்ஸ்அப் உரையாடல் இதோ.

புதுக்கடை நீதிமன்றத்தில் சாட்சிக் கூண்டில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு துப்பாக்கி ஏந்தியவருக்கும் வெளிநாட்டில் இருந்து இந்த கொலையை இயக்கிய கமாண்டோ சலிந்த என்ற நபருக்கும் இடையிலான வாட்ஸ்அப் உரையாடல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிஸார் நடத்தி வரும் விசாரணையில் தெரியவந்துள்ள அந்த உரையாடல்கள் பின்வருமாறு.

கமாண்டோ சலிந்த – நீங்கள் வேலையை செய்யுங்கள். வெளியே எல்லாம் சரி. பயப்பட வேண்டாம். தாக்குங்கள். எல்லாம் பெலன்சாக உள்ளது. பயப்படாமல் தாக்குங்கள்.

துப்பாக்கி ஏந்தியவர் (சமிந்து) – உள்ளே பிரச்சனை எதுவும் இல்லையா? நான் உள்ளே இருக்கிறேன்.

கமாண்டோ சலிந்த – இல்லை தாக்குங்கள், தயாராக இருக்கிறீர்களா? தாக்குங்கள். முடித்துவிடுங்கள். எல்லாம் சரி.

துப்பாக்கி ஏந்தியவர் – பொலிஸ்காரர்கள் இருக்கிறார்கள்?

கமாண்டோ சலிந்த – எல்லாம் சரி. நீங்கள் தாக்குங்கள்.

காலை 9.54 மணிக்கு துப்பாக்கி ஏந்தியவர் கமாண்டோ சலிந்தவுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார்.

துப்பாக்கி ஏந்தியவர் – அவன் இறந்துவிட்டானா?

கமாண்டோ சலிந்த – இறந்துவிட்டான்.

துப்பாக்கி ஏந்தியவர் – அருமை.

கமாண்டோ சலிந்த – நீ என் உயிர்.

துப்பாக்கி ஏந்தியவர் – என்ன அண்ணா இப்படி பேசுகிறீர்கள்? நீங்கள் எனக்கு சாப்பிடக் கொடுத்து ஒரு தந்தையை விட அதிகமாக கவனித்தீர்கள். எனவே நீங்கள் என் உயிர் அண்ணா. தங்கை இன்னும் அங்கேயே இருக்கிறாள். நான் வந்துவிட்டேன்.

Leave A Reply

Your email address will not be published.