அமெரிக்காவின் புதிய மத்தியப் புலனாய்வுத் துறை இயக்குநர் யார்?

அமெரிக்காவின் புதிய மத்தியப் புலனாய்வுத் துறை இயக்குநராகத் காஷ் பட்டேல் பொறுப்பேற்கிறார்.
44 வயது திரு பட்டேல் அமெரிக்காவில் பிறந்தவர். அவருடைய பெற்றோர் குஜராத்திலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர்கள்.
வழக்கறிஞரான அவர் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு நெருக்கமானவர்.
செனட் சபை 51க்கு 49 என்ற வாக்கு வித்தியாசத்தில் பட்டேலின் நியமனத்தை உறுதி செய்தது.
அமெரிக்காவில் மத்தியப் புலனாய்வுத் துறை இயக்குநரின் மேற்பார்வையில் 55 அலுவலகங்களில் 37,000 அதிகாரிகள் பணிபுரிகின்றனர்.
அது போக, சுமார் 200 நாடுகளில் அலுவலகங்கள் உண்டு.