பேருந்தில் படுகொலை செய்யக்கூடிய சன்னங்கள் சிக்கின.

பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து 123 சன்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த பேருந்து கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து என்று பண்டாரவளை பொலிஸார் கூறுகின்றனர்.
பயணப் பொதி வைத்திருக்கும் இடத்தில் ஒரு சிறிய பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த வெடிமருந்து குவியல், கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் பொலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.
பையை பேருந்தில் வைத்த நபர் பேருந்தில் இருந்து இறங்கிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.