நளின் ஹேவகேக்கு NPP பெண் எம்.பி பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிப்பு

நேற்று பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே ஆற்றிய உரைக்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தனது சமூக ஊடக கணக்கில் அது குறித்து பதிவிட்ட அவர், பாராளுமன்றத்தில் ஒரு பெண் குறித்து செய்யப்பட்ட கருத்துக்களை தனிப்பட்ட முறையில் தான் அங்கீகரிக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

நளின் ஹெவகே ரோஹினி கவிரத்ன எம்.பி.யை இலக்காக வைத்து பேசியதை அடுத்து பாராளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நளின் ஹேவகே பேசியதை திருப்பி பெற வேண்டும் என , SJB நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர், ஆளும் கட்சி தலைமை அமைப்பாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ அந்த அறிக்கையை ஹன்சார்ட் பதிவில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.