துப்பாக்கி பற்றி தகவல் தருவோருக்கு 10 லட்சம் பரிசு.. அழைக்க வேண்டிய தொலைபேசி எண் 1997.

நாட்டில் உள்ள சட்டவிரோத துப்பாக்கிகள் பற்றிய தகவல்களை வழங்க பொதுமக்களுக்காக ஒரு குறுகிய தொலைபேசி எண் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1997 என்ற குறுகிய தொலைபேசி எண் மூலம் பொதுமக்கள் ஆயுதங்கள் பற்றிய தகவல்களை வழங்கலாம் என்று பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
டி-56 துப்பாக்கி பற்றிய சரியான தகவல்களை வழங்கும் நபருக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் சட்டவிரோத துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பதாகவும், அவை பற்றிய தகவல்களை வழங்குவது பொதுமக்களின் கடமை என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.