ஜெர்மனியில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி ஏற்படலாம் ?

ஜெர்மனியில் புதிய அரசாங்கத்தைத் தேர்வுசெய்வதற்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) நடைபெற்றது.

மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தபோதும் அங்கு விரைவில் புதிய அரசு அமைய அவர்கள் நெடுநாள்கள் காத்திருக்க நேரிடலாம்.

ஏனெனில், கூட்டணிப் பேச்சுவார்த்தை பல வாரங்களுக்கு நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதே அதற்குக் காரணம்.

ஃபிரீட்ரிக் மியர்ஸ், முன்னிலை பெறுவார் என எதிர்பார்க்கப்படுவதால் , ஏப்ரல் 20ஆம் திகதி ஈஸ்டர் திருநாளுக்குள் உடன்பாட்டை எட்ட இலக்கு கொண்டுள்ளார். சாத்தியமுள்ள கூட்டணிக் கட்சிகள் விரைவான பேச்சுவார்த்தைக்குத் தயாராகும்படி அவர் வலியுறுத்தியுள்ளார்.

இப்போதைய பிரதமர் ஒலாஃப் ஷோல்சின் கூட்டணியின் கட்சியைக் காட்டிலும், மியர்சின் பழைமைவாதக் கூட்டணி முன்னிலையில் இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

ஆயினும், அக்கூட்டணிக்கு கிட்டத்தட்ட 30% வாக்குகளே கிட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற அக்கூட்டணிக்கு வேறு கட்சிகளின் ஆதரவும் தேவைப்படலாம்.

பெரும்பாலும் பிரதமர் ஷோல்சின் கட்சியுடன் அவர் கூட்டணி வைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மனியில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்குப் பின், ஆட்சியமைக்க பத்து வாரங்கள் ஆனது.

அதற்கு முந்திய 2017 தேர்தலில், கூட்டணி சுமுகமாக அமைந்து ஏஞ்சலா மெர்க்கல் ஆட்சியமைக்க ஆறு மாதங்களானது குறிப்பிடத்தக்கது.

கடந்த பத்தாண்டுகளாக, ஜெர்மனிக்கான மாற்று (AfD) எனும் வலதுசாரிக் கட்சிக்கான ஆதரவு கூடிவந்தபோதும் இப்போது அது குறையத் தொடங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அக்கட்சிக்கு கிட்டத்தட்ட 20% வாக்குகள் கிடைக்கும் எனக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.