யாழ்.அதிகாரியின் மகன் குடிபோதையில் ஓட்டிய வாகனம் விபத்துக்குள்ளானது.

வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத சொகுசு ஜீப் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதியும் மற்றொருவரும் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் உதவி மாவட்ட செயலாளரின் பெயர்ப் பலகையுடன் இருந்த. ஜீப்பை செலுத்தியது அவரது மகன் என்றும், அவர் அந்த நேரத்தில் குடிபோதையில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த நேரத்தில் ஜீப்பில் அதிகாரப்பூர்வ ஓட்டுநர் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.