வவுனியா பல்கலைக்கழகத்தின் ஊடக மற்றும் இதழியல் கற்கை நெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு.

வவுனியா பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் இதழியல் கல்வி உயர்தர சான்றிதழ் கற்கை நெறியின் இரண்டாவது அணிக்கான கற்கை நெறி ஆரம்பம்.

வவுனியா பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் இதழியல் கல்வி உயர்தர சான்றிதழ் கற்கை நெறியின் இரண்டாவது அணிக்கான கற்கை நெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(23.02) ஞாயிறு  வவுனியா பல்கலைக்கழகத்தின் பூங்கா  வீதியில் உள்ள தொடர் தொலைக் கல்வி  நிலையத்தில்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பல்கலைக்கழகமானது பல்கலைக்கழகமாகத்  தரம் உயர்த்தப்பட்ட பின்னர் கடந்த 2023 ம் ஆண்டு ஊடகம் மற்றும் இதழியல் கல்வி உயர்தர சான்றிதழ் கற்கை நெறியின் முதலாவது அணி கற்கை நெறியை ஆரம்பித்து நிறைவு செய்திருந்தது.

இதன்  தொடர்ச்சியாகவே  ஊடகம் மற்றும் இதழியல் கல்வி உயர்தர சான்றிதழ் கற்கை நெறியின் இரண்டாவது அணிக்கான கற்கைகள் இன்று(23) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கற்கை நெறியின் ஒருங்கிணைப்பாளர் திருமதி  மதிவதனி சசிதரன்  தலைமையில் இடம்பெற்ற கற்கைநெறி ஆரம்ப நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஸ்ர பேராசிரியர் அருளம்பலம்  அற்புதராஜா,  ஊடகவியலாளர் அருட்பணி  ரூபன் மரியாம்பிள்ளை,  சிரேஸ்ர ஊடகவியலாளர்  அ.நிக்சன்,  ஊடகவியலாளர்களான ந.கபில்நாத்,மற்றும்  நபீஸ், சகவாழ்வு நிலையப் பணிப்பாளர் யூட் லியோன்,மற்றும் கற்கை நெறியின்  பழைய மாணவர்கள், புதிய மாணவர்கள் எனப் பலரும்  கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.