கொலை அலைகளால் சுற்றுலா பயணிகள் அச்சம்.. சுற்றுலா தொழில் முடக்கம்..

சுற்றுலாத் துறையில் தற்போது விரைவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், ஆங்காங்கே நடக்கும் மனிதக் கொலைகள் சுற்றுலாத் துறையை நேரடியாக பாதிக்கும் என்றும் அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அளவிலான சுற்றுலா தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் சமீர சேனக டி சில்வா தெரிவித்தார்.
காலியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சமீர சேனக டி சில்வா மேலும் கூறியதாவது:
“தெருவில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டால், சுற்றுலா பயணிகள் இந்த நாட்டிற்கு வருவது தடைபடும் அபாயம் உள்ளது. சுற்றுலா தொழில் புத்துயிர் பெறும்போது, சில துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நேரத்திலும் சுற்றுலாத் தொழில் உச்சத்தை நோக்கி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் எழுவது சிக்கலானது.
சுற்றுலாப் பயணிகளுக்கு விபத்துகள் ஏற்பட்டால், திருட்டு நடந்தால் பிரச்சினைகள் எழுகின்றன. அதேபோல், இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை அலைகளை கட்டுப்படுத்தாவிட்டால், பல்வேறு தடைகள் ஏற்படலாம். இதுகுறித்து பொறுப்பான அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். மேலும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.