தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் போப்பாண்டவர்.

இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ள போப்பாண்டவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக திங்கட்கிழமை (பிப்ரவரி 24) தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் பிப்ரவரி 23 இரவு அவர் நன்கு உறங்கியதாகவும் ஓய்வெடுத்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மூச்சுத் திணறல் காரணமாக பிப்ரவரி 14ல் போப்பாண்டவர் இத்தாலியத் தலைநகர் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

88 வயது போப் ஃபிரான்சிஸ் 2013ஆம் ஆண்டிலிருந்து போப்பாண்டவராக இருந்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.