ஜனாதிபதி அலுவலகத்தில் 3 புதிய நியமனங்கள்.

ஜனாதிபதி அலுவலகத்தில் மூன்று புதிய நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, புதிய ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
மூத்த ஊடகவியலாளர் சந்தன சூரியபண்டார ஜனாதிபதியின் ஆலோசகராக (ஊடகம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சர்வதேச ஊடகம் மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளராக மூத்த ஊடகவியலாளர் அனுருத்த லொக்குஹப்பு ஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.