இலங்கையில் இடம்பெறும் LPL டி20 தொடரின் போட்டி அட்டவணை.

இலங்கையில் இடம்பெறும் LPL டி20 தொடரின் போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியாகி இருக்கிறது.
LPL போட்டிகள் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 வரை இடம்பெற இருக்கிறது. சுற்று போட்டிகளின் முதல் 11 போட்டிகள் அம்பாந்தோட்டை மைதானத்தில் இடம்பெறுவதுடன், இறுதி 9 போட்டிகள் கண்டியில் இடம்பெற இருக்கிறது. இம்முறை இலங்கையில் நிலவும் மழை காலநிலை காரணமாக இறுதிப்போட்டிக்கு மேலதிக ஒருநாள் ஒதுக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.