கடற்கரையில் துப்பாக்கிச் சூடு கொலை – 7 சந்தேக நபர்கள் கைது…

கடந்த 20ஆம் தேதி உஸ்வெட்டகெய்யாவ மோகன்வத்த கடற்கரையில் கொல்லப்பட்ட 29 வயது அஜேஷ்காந்த போபேஆராச்சி என்பவரின் கொலை தொடர்பாக 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் கொலையாளி ஒருவரும் உள்ளார் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை டி-56 துப்பாக்கியால் சுட்டு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூடு சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.
நீர்கொழும்பு பிரிவு மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் ஒரு பெண் இருப்பதாகவும் விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொலை போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நடந்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.