சஞ்சீவ கொலையாளிகளுக்கு வழக்கறிஞர் உதுல் பிரேமரத்ன பெயரில் பல அழைப்புகள்…

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய துப்பாக்கிதாரி, வழக்கறிஞர் உபுல் பிரேமரத்னவின் , உதுல் பிரேமரத்ன என்ற பெயரிலும், அவரது படத்தை பயன்படுத்தியும் போலியான சமூக வலைதள கணக்கு மூலம், கொலையை இயக்கிய முக்கிய சந்தேக நபருடன் தொடர்புகளை வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

வழக்கறிஞர் உதுல் பிரேமரத்னவின் பெயர் மற்றும் அவரது புகைப்படத்தை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

உதுல் பிரேமரத்னவின் சமூக ஊடக கணக்கு மூலம் துப்பாக்கிதாரிக்கு பல அழைப்புகள் வந்ததால், இதுகுறித்து நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில் இந்த நிலை தெரியவந்துள்ளது.

கொலை சதிகாரர்கள் தங்கள் அடையாளத்தை மறைக்க இந்த தந்திரத்தை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் கூறுகின்றனர்.

இதுகுறித்து உதுல் பிரேமரத்ன கூறுகையில், இதுபோன்ற சம்பவம் குறித்து தனக்குத் தெரியாது என்றும், தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி யாராவது சமூக வலைதள கணக்கை வைத்திருந்தால் அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.