‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு முதலாவது கட்டம் நிறைவு!

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந்த படம் 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது, இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சென்னை, சிதம்பரம், காரைக்குடி, மதுரை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், இயக்குனர் சுதா கொங்கரா இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரையில் முடிவடைந்ததாக இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரிவித்தார்.
‘பராசக்தி’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைப்பெறவுள்ளது.