திருடிய பைக்கை பணம் மற்றும் மன்னிப்பு கடிதத்துடன் உரிமையாளரின் வீட்டின் முன்பே நிறுத்திய திருடன்!

திருடிய பைக்கை பணம் மற்றும் மன்னிப்பு கடிதத்துடன் உரிமையாளரின் வீட்டின் முன்பே நிறுத்திய சம்பவம் வைரலாகியுள்ளது.

தமிழக மாவட்டமான சிவகங்கை திருப்புவனம் அருகே திருடிய பைக்கை உரிமையாளரின் வீட்டின் முன்பே திருடன் நிறுத்தியுள்ளார்.

அத்துடன் அந்த திருடன் ரூ.1500 பணம் மற்றும் மன்னிப்பு கடிதத்தை வைத்து சென்றுள்ளார். ப்ளாக் பாண்டா என்ற பெயரில் அந்த மன்னிப்பு கடிதம் இருந்துள்ளது.

அக்கடிதத்தில், “அவசரத்துக்கு உங்களது பைக்கை எடுத்துச் சென்றேன். நான் செய்த தவறை உணர்ந்து 450 கி.மீ தூரம் பயணித்து பைக்கை கொண்டுவந்துள்ளேன்.

ரூ.1500 பணம் பெட்ரோல் டேங்க்கில் உள்ளது. எப்படியும் நீங்கள் கெட்ட வார்த்தை பேசியிருப்பீர்கள். அதற்கு நீங்கள் வருந்த வேண்டும். இல்லையென்றால் நாங்கள் வருந்த வைப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.