15% வரி விதிப்பால் Online டொலர் சம்பாதிப்பவர்கள் கோபத்தில்….

இணையம் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ டொலர் வருமானம் பெறுபவர்களுக்கு 15 சதவீதம் வரி விதிப்பதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது தொடர்பாக வெளிநாட்டு வருவாயை உண்டியல், ஹவாலா முறைகள் மூலம் அனுப்புவது அல்லது இணைய கணக்குகளிலேயே அந்த பணத்தை வைத்திருப்பது குறித்து தற்போது பகிரங்கமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இணையம் மூலம் பணம் சம்பாதிப்பவர்களுக்கு அரசாங்கம் எந்த வசதியும் செய்யாமல் 15 சதவீதம் வரி விதிப்பது மிகவும் அநியாயம் என அவர்கள் கூறுகின்றனர்.