உண்டியல் பண பரிமாற்றம் பதிவு செய்யப்படும்.. – அமைச்சர் சத்துரங்க அதிரடி

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் உண்டியல் முறை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.
அவர் தனது சமூக வலைதள கணக்கு மூலம் பதிலளிக்கும்போது இதை குறிப்பிட்டார்.
15% வரி விதிப்பால் Online டொலர் சம்பாதிப்பவர்களுக்கு வரி விதித்தால் வெளிநாட்டு வருவாயை உண்டியல், ஹவாலா முறைகள் மூலம் அனுப்புவது அல்லது இணைய கணக்குகளிலேயே அந்த பணத்தை வைத்திருபோம் என வெளியான கருத்துகளுக்கு இப்படி ஒரு அதிரடி அறிவிப்பை , பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.
இணையம் மூலம் பணம் சம்பாதிப்பவர்களுக்கு 15 சதவீதம் வரி விதிப்பது தொடர்பாக பிரதி அமைச்சர் தனது சமூக வலைதள கணக்கில் ” வெளியிட்ட வீடியோ தொடர்பாக இந்த விவாதம் எழுந்துள்ளது.