Online டொலர் வரியை நான் எதிர்க்கிறேன்.. அதை உடனடியாக மாற்ற வேண்டும்.. – ஹந்துன்னெத்தி

இணையம் மூலம் சேவைகளை வழங்குபவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 15 சதவீத புதிய வரிக்கு தான் உடன்படவில்லை என தொழில் துறை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
எனவே, அந்த வரி மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த புதிய வரியின் மூலம் இணையம் மூலம் டொலர் சம்பாதிக்கும் நபர்கள் நாட்டிற்கு டொலர்களை கொண்டு வர ஊக்கமிழக்கிறார்கள் என்றும், அது நடக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.
தேசிய தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.