ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 25% வரி – ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவை அழிக்க அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு – டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 25% வரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதை கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவை அழிக்க அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இது குறித்து கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியம், இதற்கு எதிராக விரைவாக பதிலளிப்பதாக தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் எப்போதும் ஐரோப்பிய வணிகங்கள், தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோரை நியாயமற்ற வரிகளில் இருந்து பாதுகாக்க அர்ப்பணித்துள்ளது என்று அதன் செய்தித் தொடர்பாளர் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.