நடிகை ஷாலினி 25 ஆண்டுகள் கழித்து கணவர் அஜித்துடன் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்.

நடிகை ஷாலினி 25 ஆண்டுகள் கழித்து கணவர் அஜித்துடன் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஷாலினி, அலைபாயுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின்பு காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, அமர்க்களம் என பல படங்களில் நடித்து முன்னணி நடியைாக வலம்வந்தார்.
சினிமாவில் உச்சத்தில் இருந்த போது அமர்க்களம் படத்தில் நடிக்கும் அஜித்துடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு குடுப்பத்திற்காக நடிப்பிலிருந்து விலகிய ஷாலினி தற்போது அஜித்திற்கு மிகவும் பக்க பலமாக செயல்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள நிலையில், நடிகை ஷாலினி ஒரு கேமியோ ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ஷாலினி நடித்திருந்தால் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பின்பு மீண்டும் அஜித்துடன் இணையவுள்ளார். இந்த தகவலால் தற்போது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.