முன்னாள் ஜனாதிபதிகள் குற்றங்களுக்கு பாதாள உலகத்தினரை பயன்படுத்தினர்-பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றங்களை செய்ய பாதாள உலக நபர்களை பயன்படுத்தியுள்ளனர் என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“காலஞ்சென்ற ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன கோனவல சுனிலை பயன்படுத்தி உச்ச நீதிமன்ற நீதிபதியின் வீட்டின் மீது கல் எறிந்தார்.
காலஞ்சென்ற ஜனாதிபதி ஆர். பிரேமதாச பாதாள உலக தலைவர்களை பயன்படுத்தி ஊடகவியலாளர் ரிச்சர்ட் டி சொய்சாவை கடத்தி கொலை செய்தார்.
ரிச்சர்ட் சொய்சா பற்றிய ராணி திரைப்படம் இன்று திரையிடப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ரகசியமாக இந்த படத்தை பார்த்து அவரது தந்தை ஜனாதிபதியாக இருந்த காலத்தில் என்ன செய்தார் என்பதை அறியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜூலம்பிட்டியே அமரே மற்றும் வம்பொட்டா ஆகிய பாதாள உலக கதாபாத்திரங்களுடன் பழகினார்.
ஜூலம்பிட்டியே அமரே ஒரு காலத்தில் நாமல் ராஜபக்ஷ எம்.பி.யின் பாதுகாவலராக இருந்தார்” என வட்டகல கூறினார்.