‘கிரிப்டோ’ நாணய மோசடி; தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர்களிடம் விசாரணை

‘கிரிப்டோ’ மின்னணு நாணய மோசடி தொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.
‘கிரிப்டோ’ மின்னணு நாணயத்தில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி, புதுச்சேரியைச் சேர்ந்த 10 பேரிடம் கிட்டத்தட்ட 2 கோடியே 40 லட்சம் ரூபாய் ரொக்கம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கோவையைத் தலைமையிடமாகக் கொண்ட அந்நிறுவனத்தின் திறப்பு விழாவில் நடிகை தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதனால், அவர்களிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவுசெய்துள்ளது.