இந்திய ஆல்டோ இலங்கையில் விற்பனைக்கு தயாராகிறது.. 71 லட்சம் ரூபாய்.. இந்தியாவில் 5 லட்சம் ரூபாய்..

நாட்டில் மிகவும் பிரபலமான மோட்டார் வாகனங்களில் ஒன்றான இந்திய சுசுகி ஆல்டோ கார் இலங்கையில் விற்பனைக்கு தயாராக உள்ளது.
இந்த வாகன வகையின் அதிகாரப்பூர்வ டீலரான அசோசியேட்டட் மோட்டார்வேஸ் நிறுவனம், அந்த காரை 71 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இந்த மோட்டார் வாகனம் இந்திய ரூபாய் 5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது, இது இலங்கை மதிப்பில் சுமார் 20 லட்சம் ரூபாய்.
அதன்படி, இந்த காரை இலங்கையில் வாங்கும்போது, இந்திய விலையை விட 50 லட்சத்திற்கும் அதிகமான ரூபாயை நுகர்வோர் செலுத்த வேண்டியிருக்கும்.