நீண்ட எரிபொருள் வரிசைகள்…

இலங்கையின் பல பகுதிகளில் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தப்போவதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் அறிவித்ததை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட மூன்று சதவீத கமிஷனை நிறுத்த பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்ததால் இந்த நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையில், நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும், எரிபொருள் விநியோகம் வழக்கம் போல் நடைபெற்று வருவதாகவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.